மரண அறிவித்தல்: தம்பிராசா கந்தசாமி
இறப்பு: 2014-04-28 ***** பிறந்த இடம்: நீர்வேலி
வாழ்ந்த இடம்: வெள்ளவத்தை


யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா கந்தசாமி அவர்கள் 28-04-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தம்பதிராஜா, ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிப்பிள்ளை, தங்கமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

திலீபன், தீபிகா, பிரேதிக்கா, பிரதீபன், கஜானன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கங்காசினி, ரங்கன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுஜானி, சுபான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 30-04-2014 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணி தொடக்கம் பி.ப 05:00 மணிவரை Mahinda Funeral Director, 591, Galle Road, Mt.Lavinia என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 02-05-2014 வெள்ளிக்கிழமை அன்று நீர்வேலியில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

Posted on 29 Apr 2014 by Admin