திரு சண்முகம் கிருஸ்ணகுமாரன்
வயது 61
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்), Leverkusen, Germany, Gravesend, United Kingdom
தோற்றம் 26 OCT 1963***மறைவு 03 FEB 2025
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Leverkusen, பிரித்தானியா Gravesend ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் கிருஸ்ணகுமாரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
சண்முகம் குடும்பத்தினர்