யாழ். நீர்வேலிதெற்கு கந்தசுவாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை கண்மணியம்மா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும்
பாதுகாத்த எங்கள் அன்பு அன்னையே
எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது தான் ஏனோ
மண்ணில் மலர்ந்த மலரம்மா
எண்ணத்தில் இனிமை கொண்ட
எங்கள் வாழ்வியலின் தத்துவமே....!
வசந்தகால ஒளிவிளக்கே...!
மறுபடி வரவேண்டும் உன்மடியில்
தலை சாய்த்து உறங்கவேண்டும்...!
நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த உத்தமியே
எங்கள் அன்புத் தெய்வமே!
அம்மா? என்று குரல் எழப்புகிறோம்
ஆனால்... பதில் இல்லையே!
நீங்கள் பிரியில்லையம்மா...
எங்களோடு வாழ்ந்து கொண்டு
இருக்கிறீங்கள் அம்மா…
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!
தகவல்: உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்