28ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் முத்தையா சண்முகம்
அமரர் முத்தையா சண்முகம்
வயது 64
யாழ் நீர்வேலி வடக்கு, Jaffna, Sri Lanka (பிறந்த இடம்), நீர்வேலி தெற்கு, Sri Lanka
தோற்றம் 13 APR 1932***மறைவு 16 AUG 1996


யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்தையா சண்முகம் அவர்களின் 28ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் அருமை தந்தையே
 எம்மைவிட்டு எங்கு சென்றீரோ...
 வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து இருபத்தெட்டு ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் அப்பா...

ஆண்டவன் படைப்பினை
 ஆழமாய் பார்த்தாலும்!
பாசமாய் உங்களின்
 பண்பினை நினைகின்றோம்!
நேசமாய் உங்களின்
புன்னகையை ரசிக்கின்றோம்!

எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
 அரவணைத்து எம்மை வழிநடத்திய
அந்த நாட்கள் எம் நினைவலைகளில்
 என்றும் சுழல்கிறதே அப்பா...

காவல் தெய்வமாய் எங்களோடு
என்றும் நீங்கள் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு
 வாழ்ந்து கொண்டிருக்கும்....
 அன்புத் தந்தையே!

உங்கள் ஆத்மா சாந்தியடய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

 தகவல்: குடும்பத்தினர்

Posted on 08 Aug 2024 by Neervely Admin1
Content Management Powered by CuteNews