5ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் அருணாசலம் குணேஸ்வரநாதன் (குணா)
அமரர் அருணாசலம் குணேஸ்வரநாதன் (குணா)
வயது 53
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்), சுவிஸ், Switzerland
தோற்றம் 13 JUL 1966***மறைவு 18 JUL 2019


யாழ். நீர்வேலி அச்செழு வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருணாசலம் குணேஸ்வரநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

அனுதினமும் அகம் விட்டகலா
நினைவின் வண்ணங்கள்
ஆண்டுகள் ஐந்து அகன்றாலும்
அகலாத எம் எண்ணங்கள்

ஆண்டுகள் நீளலாம் ஆனால் உங்கள் நினைவுகள் நீங்காது எங்களுக்கு பெருமை சேர்த்த
எம் அப்பாவே உங்கள் சிறப்பினால்
நாம் எல்லோரும் பெருமை அடைந்தோம்!

இன்று நீங்கள் எம்மோடு இல்லை ஆனாலும்
நீங்கள் காட்டிய பாதையில் தான்
பயணிக்கின்றோம் அப்பா!

மண்ணோடு மறையும் காலம் வரை எம்
நெஞ்சோடு இருக்கும் உங்கள் நினைவுகளுடன்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!! 

தகவல்: குடும்பத்தினர்

Posted on 19 Jul 2024 by Neervely Admin1
Content Management Powered by CuteNews