யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேஸ்வரன் இராமநாதபிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்தாகியும்
எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால்
வடியும் கண்ணீரும் காயவில்லை
பாசமழை பொழிந்து
நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?
பாவிகள் நாங்கள் உங்கள்
நினைவில் பரிதவித்து
நிற்கின்றோம் இன்று..
"காலங்கள் கடந்து போகும் ஆனால்
கண்மணியே அப்பா உன் நினைவுகள் மட்டும்
காலம்தனை வென்று எம்மிடத்தில் நிற்கும் - எம்
கண்ணிறைந்த கண்ணீரோடு அப்பா...!
இன்றுடன் 10ஆண்டுகள் ஓடி
மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கும்பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்: குடும்பத்தினர்