யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பரிஸ்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை தனபாலசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 01-02-2024
எங்கள் அன்புத் தெய்வமே!
எங்கள் அன்பு அப்பாவே!
நொடிப் பொழுதில் எமை
நோகவிட்டு சென்று விட்டீர்கள்!
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ....
ஆண்டுகள் நீளலாம் ஆனால்
உங்கள் நினைவுகள் நீங்காது
உங்கள் திருமுகம் எங்களை
விட்டு மறையுமா மறக்குமா...
ஆண்டு பத்து ஆகிவிட்டது
ஆறவில்லை எம் துயர்
நிஜத்தில் நீங்கள் எம்முடன் இங்கில்லை
நினைவில் தினமும் எம்முடன் வாழ்கின்றீர்கள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்: குடும்பத்தினர்