ஓய்வுப்பெற்ற ஆசிரியர் நீர்வேலி றோ.க.த.க.பாடசாலை, மீனாட்சி அம்மன் ஆலய முன்னாள் தர்மகர்த்தா, தலைவர் மற்றும் போசகர், சாரதா சனசமூக நிலைய ஸ்தாபகர்-சங்கத்தானை, பரம்பன்கிராய் தமிழ் கலவன் பாடசாலை ஸ்தாபகர்- பூநகரி
யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை துரைசிங்கம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து எங்களை
வானுயர பெயர் விளங்க வைத்த எங்கள்
அன்புத் தெய்வமே ஐயா
நீங்கள் இறைவனடி சேர்ந்து ஏழாண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்