38ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் EK சண்முகநாதன்

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த EK சண்முகநாதன் அவர்களின் 38ம் ஆண்டு நினைவஞ்சலி.


நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
38 ஆண்டு ஆன போதும்
உங்களை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் வருந்துகின்றோம்- அப்பா

தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உங்களை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...

நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - உங்களை
நினைக்கும்போதெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்

அப்பா, நீங்கள் எங்களுக்கு அழகான
நினைவுகளை விட்டுச் சென்றீர்கள்,
உங்கள் அன்பு இன்னும் எங்களுக்கு வழிகாட்டி,
 நாங்கள் உங்களைப்பார்க்கா முடியாவிட்டாலும்,
 நீங்கள் எப்போதும் எங்கள் பக்கத்திலேயே
 இருப்பதுபோல உணர்கின்றோம்..

இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உங்களை தேட
எம் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள்

Posted on 30 Nov 2023 by Admin
Content Management Powered by CuteNews