யாழ். திருநெல்வேலி பத்திரகாளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திலகவதி செல்வராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 20/11/2023
ஆண்டுகள் ஒன்று
ஆன போதிலும் நீங்களின்றிய
துயரங்கள் இன்னும் ஆறவில்லை அம்மா!!
எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனிய சொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அம்மா!!
ஓரு வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் ஏதோ
ஓரிடத்தில் உங்களின் ஞாபகம்
அம்மா மீண்டும் வரமாட்டாரா
என ஏங்குவோம் நாங்கள்!
உங்களின் மீதான எங்களின் தேடல்கள்
எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!!
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்....!!!!!!
தகவல்: குடும்பத்தினர்