நீர்வேலி தெற்கு, Sri Lanka (பிறந்த இடம்), யாழ்ப்பாணம், Sri Lanka, கொழும்பு, Sri Lanka
யாழ். நீர்வேலி தெற்கு கந்த சுவாமி கோயில் அடியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருளம்பலம் குமாரசுவாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 05-11-2023
கடவுளே கிடைத்தார் எனக்கு
வரமாக தந்தை உருவில்
சொந்தக் காலில் தனியாக
தலைநிமிர்ந்து நிற்கவிட்டு - தன்
வாழ்க்கை பயணத்தை முடித்து
கடவுளாகவே இருந்து ஆசிர்வதிக்க
விடைக்கொடுத்தார் அப்பா!!!
உங்களை நினைக்கும் போதெல்லாம்
எனக்கு ஆறுதல் சொல்ல வருவது
கண்ணீர் மட்டும் தான்!!
உங்கள் அன்பை தோற்கடிக்கும்
மற்றொரு அன்பை இவ்வுலகில்
யாரும் தரப்போவது இல்லை அப்பா
உங்களைத் தவிர!!!
ஆண்டு ஒன்றானாலும்
உங்கள் நினைவுகள்
என்றும் நம்மைவிட்டு போகாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
அன்னாரின் திதி நிகழ்வுகள் வருகின்ற 05/11/2023 - ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும் என்பதை குடும்பத்தினர் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்