1ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் வடகோவை பூ.க. இராசரத்தினம்
அமரர் வடகோவை பூ.க. இராசரத்தினம்
B.A.,Dip-in Ed.,S.L.E.A.S, ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர், எழுத்தாளர், சமாதான நீதவான்
வயது 91
மலேசியா, Malaysia (பிறந்த இடம்) கோப்பாய் வடக்கு, Sri Lanka கோண்டாவில் கிழக்கு, Sri Lanka வெள்ளவத்தை, Sri Lanka London, United Kingdom
தோற்றம் 07 JAN 1931 *** மறைவு 11 JUN 2022

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, கொழும்பு வெள்ளவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தப்பு இராசரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:31/05/2023

ஆண்டுகள் ஒன்று உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உங்கள் அன்புமுகம் எம் நெஞ்சை விட்டு
அன்போடும் பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புத் தந்தையே!

எங்களை விட்டுப் பிரிந்ததேன்
பசுமையான எம் வாழ்வு
பரிதவித்துப் போனதுவோ!

அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!

ஓராண்டு எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எம் மனது ஏற்றதில்லை
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக
நாமும் கண்டோம்

கனவெல்லாம் நனவாகும்
காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லை அப்பா!

உங்கள் ஆத்மா அமைதி பெற
கண்ணீர் பூக்களை காணிக்கையாக்குகின்றோம்...

தகவல்: இரா.உதயராஜ்(மகன்)

Posted on 01 Jun 2023 by Neervely Admin1
Content Management Powered by CuteNews