அமரர் விசுவநாதன் உருத்திரராசன்
வயது 73
யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna, Sri Lanka (பிறந்த இடம்) உருத்திரபுரம், Sri Lanka பேர்லின், Germany
பிறப்பு 29 MAR 1948***இறப்பு 12 FEB 2022
யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த விசுவநாதன் உருத்திரராசன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திரு உருவே
பாசத்தின் பிறப்பிடமே உம்
அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே
உங்கள் முகம் என்றும் உயிர் வாழும்
எங்கள் இதயமதில் இறுதி வரை
நிலைத்து நிற்கும் ஐயா
ஆண்டுகள் எத்தனைதான் சென்றாலும்
உங்கள் அன்பு முகமும், உங்களது பாசமும்
எம்மைவிட்டு என்றுமே நீங்காது!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
தினமும் உங்கள் பாதம் பணிகின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்