அமரர் செல்லையா நடராஜா
முன்னாள் பொலிஸ் உத்தியோத்தர்
வயது 87
சாவகச்சேரி, Sri Lanka (பிறந்த இடம்) நீர்வேலி, Sri Lanka கனடா, Canada
பிறப்பு 28 MAR 1925***இறப்பு 08 DEC 2012
யாழ். சாவகச்சேரி சரசாலையைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா நடராஜா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்து ஆனதப்பா
ஆறவில்லை எங்கள் மனம்
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அப்பா என்ற அன்பிற்கு ஈடாகுமா?
பாசமிகு தந்தையே
பார் புகழ் போற்ற பக்குவமாய்
எமை வளர்த்த பண்பாளனே
நேசத்தின் இருப்பிடமே
எம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பவரே
எங்கள் உயிர் மூச்சாய்
எம்மோடு வாழ்ந்திருந்த ஐயாவே
எமையெல்லாம் விட்டு
இறைவன் அருகில் சென்றீரோ!
நீங்கள் எமக்கு ஊட்டியவைகள் எல்லாம்
நித்தம் நினைவில் வந்து வந்து
எம்மை நெறிப்படுத்தி செல்கின்றன
நிதானமுடன் அவ்வழியே பயணிக்கின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
என்றும் உங்கள் நினைவில் மனைவி, மகள், மருமகன், பேரப்பிள்ளைகள்...
தகவல்: குடும்பத்தினர் (ரிப்புக்)