யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா பாக்கியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும்.
31 நாள் சென்றாலும் ஆற்றமுடியவில்லை.
உங்களை நாம் இழந்த துயரை ஈடு செய்ய
இயலாமல் தவிக்கின்றோம்.
எம்மனதை
அன்று எங்கள் துன்பம் யாவும் நீங்க
பாசத்தின் பிறப்பிடமாய்,
பண்பின் உறைவிடமாய்!
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே,
எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!
கருணையின் வடிவமே!
பண்பின் சிகரமே!
உனது அன்பாலும், அரவணைப்பாலும்,
உனது நித்திய சிரிப்பாலும்,
அடுத்தவர்களிற்கு கூறும்
ஆறுதல் வார்த்தைகளாலும் அனைவரையும் கவர்ந்தவரே!
உற்றார், உறவினர்களிற்கு நற்பண்பை காட்டியதுடன்
உங்களை நம்பி நடப்பவர்களிற்கெல்லாம்
எதையும் செய்யத்துணிந்த கருணைக் கடலே!
உயிருக்கும் மேலானவரே!
உம் நினைவோடு நீர் மறைந்து போன பின்பும்,
உம் நினைவு சுமந்த நெஞ்சமெல்லாம்
கண்ணீராய் கரைந்து பேராராய்
மடை திறந்து பெருகுதய்யா.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் அந்தியோட்டி கிரியை 04-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய கிரியைகள் 06-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரது ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசன் நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
எங்கள் அன்புத்தெய்வத்தின் மரணச்செய்தி கேட்டு நேரில் ஓடி வந்தவர்களிற்கும் தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், எல்லா வழிகளிலும் உதவிகள் புரிந்தவர்களிற்கும், எம் துயரில் பங்கெடுத்துக்கொண்ட அனைத்து அன்புள்ளங்களிற்கும், நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்