1ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் நகுலேஸ்வரி துரைரத்தினம்
அமரர் நகுலேஸ்வரி துரைரத்தினம்
வயது 86
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்) Boston, United States
பிறப்பு 10 AUG 1935***இறப்பு 22 AUG 2021

திதி: 10-09-2022

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Boston ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நகுலேஸ்வரி துரைரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஒன்று ஆன போதிலும்
நீங்களின்றிய துயரங்கள் இன்னும்
ஆறவில்லை அம்மா!!

எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும் இன்பம்
தரும் தங்கள் இனிய சொற்களும் இன்றியே
 நாங்கள் இயல்பிழந்தோம் அம்மா!!

ஓரு வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில்
ஓயாத அலைகளாய் ஒவ்வொரு
நாளும் ஏதோ ஓரிடத்தில் உங்களின்
ஞாபகம் அம்மா மீண்டும் வரமாட்டாரா
என ஏங்குவோம் நாங்கள்!

எங்களை ஆறாத்துயரில்
ஆழ்த்திவிட்டு மீளாத்துயில்
கொண்டாய் உங்கள் நினைவுகள்
என்றும் எங்கள் நெஞ்சை விட்டு அகலாது!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!  

தகவல்: குடும்பத்தினர்

Posted on 23 Aug 2022 by Neervely Admin1
Content Management Powered by CuteNews