நாம் தவித்து நிக்கின்றோம்.
நீங்கள் உங்களை உருக்கி எங்களை
வாழ வைத்தீர்கள் நாங்கள் துயில் கொள்ள
நீங்கள் விழித்திருந்தீர்கள்
ஆனால் இன்று நீங்கள் மீழாத்துயில் கொள்கிறீர்கள்.
நாம் உமக்காக விழித்திருக்கின்றோம்
ஏதாவதொரு உருவில் நீங்கள் வருவீர்களா
என உம் வரவை எதிர் நோக்கி காத்திருக்கின்றோம்.
உங்கள் உதட்டோரப்புன்னகை ஒன்றால்
எங்கள் துயரங்கள் யாவையும் போக்கி வைப்பீர்
உங்கள் அன்பாலும் பாசத்தாலும் எங்கள்
எல்லோரையும் உமதாக்கினீர் உங்கள்
அன்பான பேச்சுக்கும் குறு குறு பார்வைக்கும்
கட்டுப்படாத சொந்த பந்தங்களே இல்லை இவ்வளவிற்கும்
எல்லோர் மீதும் அன்பு செலுத்தி மகிழ்வித்த நீங்கள்
இன்று எல்லோரையும் துயரத்தில்
ஆழ்த்தி விட்டு எங்கு தான் சென்றீரோ?
உங்கள் வாழ்வுள்ள வரை உங்களை காத்திருப்போம்
என்றீர் ஆனால் இன்று உம் பிரிவால்
உருகி உருக்குலைந்து செய்வதறியாது தவிர்க்கின்றோம்
உங்கள் உடல் எம்மை விட்டு பிரிந்து
எத்தனை ஆண்டானாலும் உம் நினைவு
எங்களை விட்டுப் பிரியாது எங்கள் உதிரம் எனும்
நெய்யால் எம் மன விளக்கேற்றி என்றும் உங்களை பூசித்திருப்போம்.
தகவல்: அம்மா, அப்பா, சகோதரங்கள்