அமரர் செல்லையா சுப்பிரமணியம்
C.T.B மணியண்ணை- ராஜ்மணி பந்தல் சேவை
இறந்த வயது 73
நீர்வேலி(பிறந்த இடம்) கனடா
பிறப்பு 15 MAY 1944 *** இறப்பு 12 FEB 2018
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா சுப்பிரமணியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குலவிளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குலவிளக்கே!
தரணியில் எங்களை தவிக்கவிட்டு
தனியாக நீங்கள் மட்டும் எங்கு சென்றீர்கள்...
நடந்தது கனவாகாதா என ஏங்குகின்றோம்
இல்லாளுக்கு தலைவன் இல்லை
பிள்ளைகளுக்கு தந்தை இல்லை
சூரியனே! நீ இன்றி எங்களுக்கு
ஒளியே இல்லை...
இறைவனோடு நீங்கள் - கனத்த
இதயத்தோடு நாங்கள்...
எண்ணிய பொழுதெல்லாம்
கண்ணில் நீர் கசிகிறதே!
உணர்வால் உள்ளத்தால்
வாழும் தெய்வமாகி
ஒளியாகி எமக்கெல்லாம் வழியாகி
எம் இதயங்களில் வாழ்கின்றீர்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் 3ஆம் ஆண்டு ஆத்மசாந்தி பிராத்தனை 09-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைப்பெறும்.
தகவல்: குடும்பத்தினர்