யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கம் பாலசுப்பிரமணியம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
ஐந்தாண்டுகள் சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கின்றீர்கள்எமை
வளர்த்த எம் அப்பா
என்றென்றைக்கும் எம்முடன் நீர்
எம் ஆயுள்வரை உன்னதமாய் நினைத்திருப்போம்
நீங்கள் நின்றதும் நடந்ததும்
பரிவோடு எமை வளர்த்ததும்
அத்தனையும் காற்றாகிப் போனதுவோ?
துணை எமக்கு யாரென்று
துவண்டிடும் வேளையில்
நீங்கள் என்றென்றும் எங்களை
நல்வழியில் நடத்துவீர்கள் என்கின்ற
துணிவிலேயே வாழ்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்: குடும்பத்தினர்