யாழ். வடமராட்சி மயிலியதனையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாறு, நீர்வேலி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் துரைசிங்கம் அவர்கள் 02-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஆறுமுகம் அன்னம்மா தம்பதிகளின் மகனும், சின்னத்தம்பி நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருபாகரன், காலஞ்சென்ற சுதிகரன், சசிகரன், சசிகலா, அரிகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராசமணி, சபாரத்தினம், அழகுதுரை, தனபாலசிங்கம், சிறீஸ்கந்தராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகுரு, பகவத்சிங்கம், தங்கமுத்து, செல்லம்மா, சின்னமணி, அலங்காரம், யோகம்மா பரமேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கமலாதேவி, குமுதினி(கனடா), அஜந்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஜித்தா(கனடா), நிதர்சன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-03-2021 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் நீர்வேலி தெற்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்