அமரர் றுதிகா றொபின்சன் யூட்
இறந்த வயது 32
நீர்வேலி(பிறந்த இடம்) பிரான்ஸ்
பிறப்பு 22 JAN 1984*** இறப்பு 01 MAR 2016
யாழ். நீர்வேலி மத்தியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட றுதிகா றொபின்சன் யூட் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் வாழ்வில் ஒளிவிட்ட தீபம் - நீ
காலங்கள் கரைந்து ஓடினாலும் - எம்
மனதில் சுடர்விடும் தீபம் - நீ
புன்னகை சிந்தும் சிரிப்புடன் - எம்
மனசிறையில் தூபம் இடும் மனையாள் - நீ
வாழ்வின் தத்துவம் தந்து குடும்ப வாழ்வை
சிறப்படையச் செய்த குத்து விளக்கு - நீ
உன்னைப் பிரிந்த நாள் முதல் இன்று வரை,
உன் அன்பிற்கு இணை யாருமில்லை
உன் பாசத்திற்கு ஏங்கும் எங்கள் ஏக்கங்கள்
உணர முடியாத வலியாய் என்னை கொல்கிறது.
நீ வேண்டும் எங்களுக்கு, உன்னுடன் வாழ்ந்த
அந்த பொக்கிஷமான நாட்கள் மீண்டும் வேண்டும்
ஆண்டுகள் ஐந்தென்ன, ஐந்நூறு ஆண்டுகள் சென்றாலும், தேயாத நிலவாக எங்கள் மனதில் பதிந்தாய் ஓயாத நினைவுகளை எங்கள் உள்ளத்தில் தந்தாய்
உன் அழகான முகம், அன்பான மனம்,
உன் குழந்தை குணம், கொடுக்கும் குணம்,
இதையெல்லாம் நினைத்துப் பார்க்க,
ஒரு ஜென்மம் போதாது
இறைவன் அவனுக்கு பிடித்தவர்களை சீக்கிரமே,
தன்னுடனேயே கூப்பிட்டு விடுவானாம்,
இத்தனை நல்ல குணம் படைத்த உன்னையும் அவன்,
தன்னிடமே அழைத்து விட்டான்....
என்றும் உன் பிரிவால் வாடும் கணவர், மகன், குடும்பத்தினர்
தகவல்: குடும்பத்தினர்