யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த வரதேஷ் திருநாவுக்கரசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
என்றும் இல்லாத நிசப்தம்
ஏனோ இன்று எம்முள்..!
நான்கு சுவர்களுக்குள்
நாளிகையும் அதுவாய் கழிகிறது !
ஆண்டுகள் ஆனது ஒன்று
ஆறவில்லை என் மனம்..
நேற்றுப் போல் எல்லாம்
என் நெஞ்சோடு நினைவிருக்க
காற்றுப் போல் கண்களுக்கு
தோன்றாமல் நிற்கின்றான்
தோற்றுப் போனது என்
எதிர்பார்ப்பு எல்லாம் தான்!
கண்ணீரில் நீந்துகிறோம் என்
நினைவுகள் அனைத்தும் உன்
நினைவுகளாக அலை மோதுவதால்..
ஏங்கி நிற்கும் என் நிலை அறிந்து
எமை தாங்கி பிடித்து இன்நிலை
போக்க என் அடுத்த பிறவியிலும் நீயே
என் கணவராக வேண்டுமென
இரக்கமற்ற இறைவனிடம் மண்டியிட்டு
வேண்டுகிறோம்!
உன் நினைவுகளோடு!