மரணஅறிவித்தல்:Dr. பொன்னுத்துரை சிவபாலன்


வயது 80
கொக்குவில்(பிறந்த இடம்) உரும்பிராய் நீர்வேலி




யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, உரும்பிராய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சிவபாலன் அவர்கள் 25-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை(இளைப்பாறிய அதிபர்- உரும்பிராய் சைவத்தமிழ் மகாவித்தியாலயம்) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கமலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

நர்சிகா(லண்டன்), தில்சிகா(கனடா), கிருசிகா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலேந்திரா(லண்டன்), கிருபாகரன்(கனடா), கரிகிருஷ்ணா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவனேசன், சிவேந்திரன் மற்றும் சிவதாசன், காலஞ்சென்ற சிவராணி மற்றும் சிவாநந்தன், சிவசுப்பிரமணியம்(லண்டன்), சிவகுமாரி, தியாகி பொன். சிவகுமாரன், சிவயோகன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வாஷ்னா, ரெல்வின், அகீவ், திமேகா, கிஸ்ரன், கிஸ்ரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 9:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் வேம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தில்சிகா - மகள்

Mobile : +16474483236

கிருசிகா - மகள்

Mobile : +447932369520

நர்சிகா - மகள்

Mobile : +447930329911

Posted on 01 Mar 2020 by Admin
Content Management Powered by CuteNews