10 ஆவது ஆண்டு நினைவு நாள்: லெப் கேணல் பார்புகழன் (சுப்பிரமணியம் உதயதாஸ்)



பிறந்த இடம்: யாழ். நீர்வேலி
வாழ்ந்த இடம்: தமிழீழம் புதுக்குடியிருப்பு




யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், தமிழீழம் வள்ளிபுனத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லெப். கேணல் பார்புகழன் என்றழைக்கப்படும் சுப்பிரமணியம் உதயதாஸ் அவர்களின் 10ம் ஆண்டு வீர நினைவஞ்சலி.

பசுமையாய் எம் மனதில்
பதிந்துவிட்ட உன் நினைவுகள்
எம் வாழ்வின் ஒளி தீபமே
எப்படி மறப்போம் உனை நாமே

பத்து ஆண்டுகள்
கனவாய் போயின
பரிதவித்து நிற்கின்றோம்
வாழ்வின் நினைவு அலைகளிலே....

அப்பாவின் அன்பிற்காய்
ஏங்கும் எம் மகன்
மனதிலுள்ள எண்ணங்களை
அறிந்திட முடியுமா?

யாரை நம்பி எம்மை
விட்டுச் சென்றீர்கள்
என் செய்வோம் நாங்கள்
ஆதரவின்றி அநாதைகளாய்...

யாராலும் பங்கு கொள்ள
முடியா எம் துயரங்கள்
உங்கள் நினைவுகளை
நெஞ்சில் சுமந்தபடி....
தகவல்: குடும்பத்தினர்

Posted on 13 May 2019 by Admin
Content Management Powered by CuteNews