6ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் யோகமலர் இரத்தினசிங்கம்


அமரர் யோகமலர் இரத்தினசிங்கம்
மலர்வு : 31 ஒக்ரோபர் 1947 - உதிர்வு : 30 ஓகஸ்ட் 2012
பிறந்த இடம்: யாழ். நீர்வேலி வடக்கு
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி வடக்கு



யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த யோகமலர் இரத்தினசிங்கம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா எனும் உயர்ந்த
உறவை நாம் இழந்து
ஆண்டுகள் ஆறு பறந்தோடிச் சென்றன
அமுதூட்டி அரவணைத்து
அன்புப் பால் தந்த
அற்புதத்தைத் தொலைத்துவிட்டு
அகன்ற வெளியிலே
அமைதியாய் நடக்கின்றோம்

உறவுகள் எமைச் சூழ்ந்து வந்தாலும்
அம்மாவைப் போல் வருமா
மம்மி என்று நாம் அழைத்த ஜீவன்
ஊரவரின் உள்ளத்திலும்
மம்மியாய் உறைந்த நாமம்
உன்னவரை உன் பிள்ளைகளை

உறவினரை அயலவரை
நேசக்கரம் கொண்டு அணைத்த நெஞ்சம்
அமைதியாய் உறங்கி
ஆண்டுகள் ஆறு சென்றாலும்
உன் நினைவுகள் சுமந்தபடி
வாழுகின்றோம் நாம் இங்கு

உங்கள் ஆத்மா சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்.
உங்கள் நினைவுகளுடன் கணவர்,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.


அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையின் நிமித்தம் 25-08-2018 சனிக்கிழமை அன்று Cross Rd, Neervely North, Neervely, Jaffna என்னும் முகவரியில் நடைபெறும் மதிய போசன நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இரத்தினசிங்கம்(கணவர்) - இலங்கை
செல்லிடப்பேசி: +94777548710
சதீஸ்குமார்(மகன்) - இலங்கை
தொலைபேசி: +94757389113
செல்லிடப்பேசி: +94772545370
சதீஸ்குமார்(மகன்) - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447711984055
சிந்துஜா(மருமகள்) - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447949323606

Posted on 24 Aug 2018 by Admin
Content Management Powered by CuteNews