9ம் ஆண்டு வீர நினைவஞ்சலி:



வீரப்பிறப்பு : 4 யூன் 1973 - வீரச்சாவு : 10 மே 2009



யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், தமிழீழம் வள்ளிபுனத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லெப். கேணல் பார்புகழன் என்றழைக்கப்படும் சுப்பிரமணியம் உதயதாஸ் அவர்களின் 9ம் ஆண்டு வீர நினைவஞ்சலி.

ஒன்பது ஆண்டுகள்
ஓடி மறைந்தனவே
ஓயவில்லை எமது துயரம்
இன்னும் தான்

தந்தையின் அன்புக்காய்
பாலனவன் ஏங்குகிறான்
அரவணைத்து அன்பு காட்ட
உங்கள் கரம் தேடுகிறான்

பகிர்ந்து கொள்ள பலவிடயம்
முடியாமல் தவிக்கின்றான்
பலமிழந்து நாமிங்கு
பரிதவித்து நிற்கின்றோம்

யாரிங்கு எமக்கு
ஆறுதல் தந்தாலும்
உங்கள் அன்புக்கு ஈடாகுமோ

அவையெல்லாம்
உரிமையுள்ள உறவென்று
யாருண்டு நமக்கிங்கு

உண்மையாய் அன்பு காட்ட
உலகிலே யாருமில்லை
மனிதம் மறைந்து விட்ட
மாய உலகில் -நாம்

ஏங்கியே நிற்கின்றோம்
உங்கள் நினைவுகளில்....
தகவல்
குடும்பத்தினர்

Posted on 12 May 2018 by Admin
Content Management Powered by CuteNews