வீரப்பிறப்பு : 4 யூலை 1973 - வீரச்சாவு : 9 மே 2009
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், தமிழீழம் வள்ளிபுனத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லெப். கேணல் பார்புகழன் என்றழைக்கப்படும் சுப்பிரமணியம் உதயதாஸ் அவர்களின் 7ம் ஆண்டு வீர நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஏழு ஆனதுவோ
ஐயா உந்தன் முகம் கண்டு
ஆறவில்லையே எம்மனது
அனலாய் தவிக்குது உன் நினைவு
பார்புகழனே உன் பாலகனை
எப்படி மறந்தாய் நீ அன்று
பக்கம் இருந்த உன் துணையை
எப்படி பிரிந்தாய் மனம் துணிந்து
பாசம் கொண்ட உன் உறவுகளை
பரிதவிக்க ஏன் விட்டாய்- எம்
உள்ளம் எல்லாம் உனை நிறைத்து
எங்கு சென்றாய் எமை மறந்து
பாசவிழிகளில் நீர் சொரிந்து
ஏங்குகின்றோம் உன் நினைவுகளில்
தகவல்
குடும்பத்தினர்