பிறந்த இடம்: யாழ். நீர்வேலி
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினசிங்கம் யோகமலர் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்றோடு மூன்றாண்டு
அவணியிலே நீங்கள் இல்லை
நினைக்கையில் வியக்கின்றேன்
நிஜமாய் நான் வாழ்ந்தேனா?
நினைவுகள் வருகையிலே
நிலைகுலைந்து போகின்றோம்
காணும் காட்சிகளில்
கண்முன்னே நிற்கின்றீர் !
அன்பாய் மம்மி என்று
அழைத்திட யாருண்டு?
வேதனையை சொல்லிவிட
வார்த்தைகள் இல்லையம்மா
மீண்டும் நீ வாருமம்மா
வாழ்ந்திட இவ்வுலகில்
நீ வரும் காலம் வரும்
என எண்ணி வாழ்கின்றோம்...!
பிரிவால் துயருறும் கணவர், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை, மருமக்கள்.
அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனை 28-08-2015 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துக்கொண்டு அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்