4ம், 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள்: அமரர் நாகலிங்கம் கந்தையா அமரர் கந்தையா பவளராணி
யாழ். மானிப்பாய் நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கு இராஜவீதி, ஜெர்மனி, டென்மார்க் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் கந்தையா, கந்தையா பவளராணி ஆகியோரின் 4ம், 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள்.
ஆண்டுகள் போனாலும் உங்கள் அன்பும் பாசமும்
எங்களை விட்டு போகவில்லை
எமது ஒளி விளக்குகளாய்
குடும்பத்தின் குலவிளக்குகளாய்
அன்பின் திருவுருவாய் வாழ்வின் வழிகாட்டியாய்
எம்மை ஆதரித்த அப்பா அம்மாவே!
இன்முகம் காட்டி இன்சொல் பேசி
எங்கள் நல்வாழ்வுக்காக வழிகாட்டியவர்களே!
கடுஞ்சொல் சொல்லாத இயல்பு
மறுவார்த்தை பேசாத மேன்மை!
பிறர் மேல் அன்பைப் பொழிந்த இதயம்
உற்றார் உறவினர் மேல் கொண்ட பற்று!
இறையன்பு கொண்டு வாழ்ந்த வாழ்க்கை
இத்தனையும் ஒருங்கே அமைந்த உன்னதப் பிறவிகள்!
அப்பா அம்மா என்ற சொல்லிற்கு அரவணைத்தாற் போல!
பிறர் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகள் போலவும்
மற்றவர்கள் மனம் நோகாமல் வாழவேண்டும்
என்று நினைத்து வாழ்ந்த காலங்களை
பலர் கூறக்கேட்டு பெருமித்துள்ளோம்!
நீங்கள் வாழ்ந்தவிடத்தில் மக்களுடன் பின்னிப் பிணைந்து
வாழ்ந்த வாழ்வை சிறியோர் முதல் பெரியோர் வரை
நினைவு கூர்வது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது
ஆண்டுகள் பல கடந்தாலும் எம்
வாழ்வோடு எப்போதும் இருப்பீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
Posted on 10 Aug 2015 by Admin