பிறந்த இடம்: அச்செழு ****** வாழ்ந்த இடம்: நீர்வேலி
அச்செழுவைப் பிறப்பிடமாகவும் நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் ராஜேஸ்வரி (சமூக அபிவிருத்தி மன்ற முன்னாள் தலைவி வல்லை நெசவுசாலை ஊழியர்) நேற்று (10.12.2014) புதன்கிழமை சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இளையதம்பி தங்கச்சிப் பிள்ளை தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா கனகம்மா தம்பதியினரின் மருமகளும், சுந்தரலிங்கத்தின் அன்பு மனைவியும், புஸ்பரேகா, சுவர்ணரேகா (வவுனியா பல்கலைக்கழகம் வணிக பீடம்) ஆகியோரின் அன்பு தாயாரும், உதயகாந்தன் அவர்களின் அன்பு மாமியாரும் உமேசன், காருண்யா, சபரிகா ஆகியோரின் அன்பு பேர்த்தியும், காலஞ்சென்ற ஈஸ்வரி மற்றும் பரமேஸ்வரி, கமலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், சிவபாதலிங்கம், சிவனேஸ்வரி, கணேசலிங்கம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (11.12.2014) வியாழக்கிழமை பி.ப. ஒரு மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் மாசுவன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : சு.சுந்தரலிங்கம்
தொடர்புகளுக்கு
சு.சுந்தரலிங்கம் - நீர்வேலி வடக்கு, நீர்வேலி. , 077 931 9434