மரண அறிவித்தல்: திரு : கனகன் தம்பித்துரை

திரு  : கனகன் தம்பித்துரை


இறப்பு : 20 நவம்பர் 2013
பி: நீர்வேலி தெற்கு
வா: நீர்வேலி மேற்கு


நீர்வேலி தெற்கை பிறப்பிடமாகவும் நீர்வேலி மேற்கு மாலை வைரவர் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட கனகன் தம்பித்துரை 20.11.2013 புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கனகன் - வாரி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தன்-வள்ளி தம்பதியரின் அன்பு மருமகனும்,

தேவியின் அன்புக் கணவரும்,

சுவேந்திரன் (பிரான்ஸ்), சுமதி ஜெயராஜ் (சுவிஸ்), ராஜன் (பிரான்ஸ்), சுபாசினி சுபாஸ் (புவனம்) கௌசிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிறி, ஜெயராஜ், விஜி, ரஜினி ஆகியோரின் மாமனாரும்,

ஒன்சிகா, பதுஜா, துஸ்மிகா ஆகியோரின் பேரனும்,

காலஞ்சென்ற நல்லம்மா, சின்னையா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் (24.11.2013) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் 10.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக நீர்வேலி அந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

அந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
இலங்கை
செல்லிடப்பேசி::
0094778906717

Posted on 22 Nov 2013 by Admin
Content Management Powered by CuteNews