அமரர் தம்பிமுத்து சுந்தரேஸ்வரன்(இராசா)
அன்னை மடியில் : 24 மே 1942 -ஆண்டவன் அடியில் : 17 ஓகஸ்ட் 2013
திதி : 15 செப்ரெம்பர் 2013
யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கு கரந்தன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிமுத்து சுந்தரேஸ்வரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி கிரியை அழைப்பிதலும், நன்றி நவிலலும்.
நாட்கள் முப்பத்தொன்று கழிந்து போயின!
முப்பத்தொன்றென்ன முப்பொழுதும் எப்பொழுதும்
எங்கள், என் உயிர் உள்ளவரை
உங்கள் நினைவுகள் எம்முடனே!
என்றும் உங்கள் நினைவுகள்
எம்முள் ஓடிக்கொண்டிருக்கும்
என்றும் எங்களை
நேசித்துக்கொண்டு இருப்பீர்கள்..!
அழகான கிராமம்! விவசாய பூமி! உரும்பிராய் - நீர்வேலி!
பண்பான மக்கள், பாசமான நண்பர்கள், அன்பான உறவுகள்!
அனைவரும் உங்கள் நினைவில் ஆறாத் துயருடன்!
எமக்காக, எங்களுக்காக ஓடி உழைத்த கால்கள்
வலிக்குது என்று வைத்தியரை நாடி வைத்தியம் செய்தோம்!
வைத்தியத்தின் பின் பலமாக
கால் வைத்து பலமுறை நடந்தீர்கள்.
துவிச்சக்கர வண்டியில் துரித கதியில்
தூரம் செல்ல நினைத்தீர்கள்!
நேசித்த உறவுகளை நோக்கி!
பாசத்தின் உறைவிடமாய் பண்பின் சிகரமாய்
புன்சிரிப்பு பூக்கும் இனிய முகமும்
அன்பின் உறைவிடமாய் திகழ்ந்த....
எங்கள் அப்பாவின் இறந்த செய்தி கேட்டு நாம் நிலைகுலைந்து நின்ற வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தும், அப்பாவின் இறுதி அஞ்சலி நிகழ்விலும், இறுதி ஊர்வலத்திலும் மற்றும் கண்ணீர் அஞ்சலி வெளியிட்டவர்களுக்கும்,
அப்பாவின் இறுதி ஊர்வலத்தை முன் நின்று நடாத்திய நீர்வேலி தெற்கு கரந்தன் வீதி தணிகை ரேடர்ஸ் நிறுவனத்தினர்க்கும், மற்றும் ஆறுதல் கூறிய அன்பர்கள், நண்பர்கள் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் தாழ்மையான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியை 15-09-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிரார்த்தனையிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொண்டு தம்பிமுத்து சுந்தரேஸ்வரன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
ஜெயந்தன்(மகன் - சுவிஸ்)