வீரப்பிறப்பு : 4 யூலை 1973 - வீரச்சாவு : 10 மே 2009
யாழ்.நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், தமிழீழம் வள்ளிபுனத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த லெப்.கேணல் பார்புகழன் என்றழைக்கப்படும் (சுப்பிரமணியம் உதயதாஸ்) அவர்களின் 4ம் ஆண்டு வீரநினைவஞ்சலி.
ஆண்டுகள் நான்கு கடந்தும் உதயா
நீங்கவில்லை உன் நினைவுகள் நெஞ்சில்
தேசத்திற்காய் நெடுந்தூரம் சென்று விட்டாய்
கலங்கித்தான் நிற்கின்றோம்
அழகு மொழி பேசி அனைவரையும் உன்வசம் ஈர்த்தாய்
தன்னிகரில்லா திறமையால் கல்வியில சிறந்தோங்கினாய்
எம்மினம் காக்க தலைவன் வழியிலே நின்றாய்
பாசறையிலே பகைவனுக்கு பறைசாற்றினாய்
விடுதலையான வேட்கையால் கேணலாய் நின்றாய்
பூவாக புன்முறுவல் முகத்திலே பூத்திருக்க
அன்பான மனையாளுடன் இல்லறத்தில் கலந்திருக்க
ஆசைமகனின் இனிய அன்பால் பூத்திருக்க
அன்பான உறவுகள் பாசத்துடன் இணைந்திருக்க
முள்ளிவாய்க்கால் உனக்கு முடிவானதா?
ஓயாது இலட்சியம் நிச்சயம் மலரும் உன் நினைவுகள்
நித்திலத்தில் நீ விட்டுச் சென்ற பாதையிலே
தொடரும் எம் பயணம்
வாழ்க உன் புகழ் இவ் வையகத்தில்.
தகவல்
அண்ணா குடும்பம், மனைவி, மகன், உற்றார், உறவினர்கள்
தொடர்புகளுக்கு:
- சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797856224