மரண அறிவித்தல்: சின்னத்தம்பி தெய்வானை

சின்னத்தம்பி தெய்வானை
இறப்பு: 2013-02-12
பிறந்த இடம்: நீர்வேலி ***** வாழ்ந்த இடம்:சிறுப்பிட்டி




நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தெய்வானை நேற்று (12.02.2013) செவ்வாய்க் கிழமை அதிகாலை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பியின் பாசமிகு மனைவியும் காலஞ்சென்ற கனகம்மா மற்றும் வேலாயுதம்பிள்ளை, நவமணி, பூதத்தம்பி, முத்துலிங்கம் ஆகியோரின் அன்புச்சகோதரியும் பரமேஸ்வரி (சுவிஸ்), மகேஸ்வரி, மாசிலாமணி (சுவிஸ்), சந்திரலீலா (கனடா), காலஞ்சென்ற கணேசகுமாரன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத்தாயும் ஜெயலோகராஜா (சுவிஸ்), பரமேஸ்வரன் (BOC-Retired), கதிர்காமநாதன் (சுவிஸ்), இலட்சுமிகாந்தன்(கனடா), மஞ்சுளேஸ்வரி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியும் ஜனூயாஜெயமுகன் (டென்மார்க்), அசோயன் (சுவிஸ்), ஜீவிதாவிமல்(BOC-Retired), கார்த்திகாசசிகரன் (ஜேர்மனி), அபீரன்(சுவிஸ்), அஜீர்(சுவிஸ்), அனிசன்(கனடா), காலஞ்சென்ற அனுர்ஜா(கனடா), அதிசன்(ஜேர்மனி), வினுசன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப்பேர்த்தியும் கஸ்விகாவின்(இலங்கை) பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று(12.02.2013) பிற்பகல் சிறுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.



தகவல் : பரமேஸ்வரன்மகேஸ்வரி(பேபி) விமல்ஜீவிதா

தொடர்புகளுக்கு
பரமேஸ்வரன்மகேஸ்வரி(பேபி) விமல்ஜீவிதா - சிறுப்பிட்டி தெற்கு.

Posted on 13 Feb 2013 by Admin
Content Management Powered by CuteNews