1ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் இராஜதுரை இரவீந்திரன்

அமரர் இராஜதுரை இரவீந்திரன்

அமரர் இராஜதுரை இரவீந்திரன்
அன்னை மடியில் : 28 ஒக்ரோபர் 1965 - ஆண்டவன் அடியில் : 13 டிசெம்பர் 2011



நீர்வேலி மத்தி, நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Fjellhamar யை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜதுரை இரவீந்திரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுஅஞ்சலி.

ஆண்டு ஒன்று ஓடியதே - ஆனால்
ஆறவில்லை எம் துயரம்!

வேலைக்குப் போய்விட்டு வீடு திரும்பி வருவாய் என்று
காத்திருக்க, வந்த செய்தி கேட்டு ஆடிப்போனோம்!
திரும்பி வீடு வருவாய் என்ற கனவும் கலைந்தபோது
ஆடிப்போனோம், ஆறவில்லை எம் துயரம்!

ஆலமரமாய் நிழல் தருவாய் என்றிருந்த
உன் பிள்ளைகளும், மனைவியும்
தவித்து நிற்க - எங்கு சென்றாய்?
எம் அன்புச் செல்வமே!

அப்பா! அப்பா! என்னும் உன் செல்வங்களை விட்டு
எப்படியப்பா கண்ணுறங்கினாய்?
அண்ணா! அண்ணா! என்று ஓடிவந்த எம்மை விட்டு
எப்படியப்பா கண்மூடினாய்?

இறுக இறுகக் கை பிடித்தாய் -
கண்டோமே கனவு, கட்டினோமே கோட்டை
இதமாக மீண்டும் எம்மிடம் வருவாய் என்று,
கடமை செய்வாய் தமக்கென்று கனவு கண்ட
அப்பாவும் அம்மாவும் கதறுகிறார்கள்,
தாமிருக்க கண் கெட்ட காலனவன் ஏன் வந்தான்
கண்மணியை பறிக்கவென - அண்ணா! அண்ணா! என்று
பலமாய் நின்றிருந்த் உடன்பிறப்புக்கள்
பக்கத்துணையிழந்து துடிக்கின்றோம்!

கேட்டவர்க்கு உதவிடும் உன் உயர்ந்த குணமே
உனக்கு காலானகி விட்டதை எண்ணும்போது
நெஞ்சம் பொறுக்குதில்லை
ஈர விழிகளுடன் உன் வரவை
மீண்டும் எம் குடும்பத்தில் வந்துதிக்க வேண்டுமென்று
உற்றார், உறவுகள், நண்பர்கள் எல்லோரும் வேண்டி நிற்கின்றோம்!

எம் செல்வத்தின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகின்றோம் !!

அன்னாரின் முதலாவது ஆண்டு பூர்த்தி கிரியைகள் 01-01-2013 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளதால் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தீபன் - நோர்வே
தொலைபேசி: +4721656463
செல்லிடப்பேசி: +4797191192
சோபன் & கமலராணி - நோர்வே
தொலைபேசி: +4722300227
மஞ்சுளா & சிவதர்சிகா - பின்லாந்து
தொலைபேசி: +358942890511
செல்லிடப்பேசி: +358415013816

Posted on 13 Dec 2012 by Admin
Content Management Powered by CuteNews