இறப்பு: 2012-10-24
பிறந்த இடம்: நீர்வேலி வாழ்ந்த இடம்: மல்லாகம்
அகிலேசர் வளவு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சாட்சரம் சிவயோகி நேற்று (24.10.2012) புதன்கிழமை காலமாகி விட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம் சரஸ்வதி தம்பதியரின் மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதியரின் மருமகனும், தனலட்சுமியின் (ஓய்வு பெற்ற நிர்வாக உத்தியோகத்தர், வலிகாமம் கல்வி வலயம்), அன்புக்கணவரும், காயத்திரி (பிரதேச செயலகம், தெல்லிப்பழை), யாழினி (பிரான்ஸ்), தவநவேந்திரன் (Virthusa,கொழும்பு), துவாரகா (இலங்கை வங்கி, காங்கேசன்துறை), சிவசுரேந்திரன் (பொலிஸ் உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்புத் தந்தையும், அங்கதனின் (பிரான்ஸ்) மாமனும், திருமதி ஜெயதேவி சுஜிதன், காலஞ்சென்ற கெங்காதேவி மற்றும் திருமதி சத்தியதேவி நித்தியானந்தன், செல்வி காசிதேவி, இராஜயோகி, திருமதி ரதிதேவி, சிவஅனுபூதிச்செல்வன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், திருமதி இராஜலக்ஷ்மி கெங்காகுலதிலகம், திருமதி விஜயலக்ஷ்மி இராமச்சந்திரன், தெய்வேந்திரம், சந்திரசேகரம், வன்னியசேகரம், தனபாலசிங்கம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (25.10.2012) வியாழக்கிழமை பி.ப. ஒரு மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மல்லாகம் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். - பங்களா வீதி, மல்லாகம்