அமரர் அனுர்யா இலட்சுமிகாந்தன்
(Grade 11 மாணவி SATEC @ W.A Porter)
அன்னை மடியில் : 29 டிசெம்பர் 1995 - ஆண்டவன் அடியில் : 14 யூலை 2012
கனடா Scarborough வை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அனுர்யா இலட்சுமிகாந்தன் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் பாசமிகு மகள் அனு விபத்திற்குள்ளான நாளிலிருந்து பதை பதைத்துப்போய் தினமும் நாம் பட்ட வேதனைகளிலும், ஆற்றொணா துயரிலும் பங்குகொண்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும், கோவில் கோவில்களாக ஏறி கூட்டுப்பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் வைத்தோருக்கும், வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கும், மருத்துவ சிகிச்சையளிப்பதற்கும் உதவிய முகம் தெரிந்த மற்றும் முகம் தெரியாத அனைத்து அன்புள்ளங்களுக்கும், தேவார பதிகம் பாடியோர், பாடசாலைகளில் கூடிப்படித்த மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள், வேலைத்தளங்களில் சேர்ந்து பணிபுரியும் நண்பர்கள், நிர்வாகிகள், ஊர் ஒன்றியங்கள், மற்றும் சோக நிகழ்வில் கலந்துகொண்ட அயலவர்கள், பிரிவுச்செய்தி கேட்டு நேரில்வந்து, தொலைபேசி மற்றும் தொலைநகல்கள் மூலம் தொடர்புகொண்டு, மின்னஞ்சல்கள் அனுப்பி, இணையத்தளங்கள் மற்றும் சமூக வலையமைப்புக்கள் மூலம் தொடர்புகொண்டு எமக்கு ஆறுதல்கள் பல சொன்ன அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், எமது துயரச்செய்தியை ஊடகங்கள் மூலமும், நினைவஞ்சலிகளை அச்சிட்டும், வாய்மொழி மூலமாகவும் பிறருக்கு கொண்டு சென்று சேர்த்த அனைவருக்கும், உடல் பார்வைக்கு வைக்கப்பட்டநாள், கிரியை, நல்லடக்கம் ஆகிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு, எமது இதயத்தை பிழிந்தெடுக்கும் இந்த ஆற்றொணா துயரில் பங்குகொண்ட அனைத்து உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கும், எமது பாச மலரிற்கு, பலவண்ண மலர் வளையங்களையும், மலர் செண்டுகளையும் சோடித்து வணக்கம் செய்த அனைவருக்கும், கிரியைகளை முறைப்படி நடாத்தித்தந்த குருக்கள்மாருக்கும், தினமும் வீட்டிற்கு வருகைதந்தும், எங்களுடன் தங்கியும், உணவுகள் பரிமாறியும், ஒரு கூட்டுக் குடும்பமாய் வாழும் அனைத்து இதயங்களுக்கும் எமது இருகரம்கூப்பிய நன்றிகள்.
இன்னும் யாருக்காவது நன்றி சொல்ல தவறியிருப்பின் அதனை பொருட்படுத்தாது எமது மனப்பூர்வமான நன்றிகளை ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் 45ம் நாள் ஆத்மாசாந்தி நிகழ்வு 01-09-2012 சனிக்கிழமை அன்று கனடா கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் நடைபெறும் என்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தவறாது அனைவரும் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இலட்சுமிகாந்தன் - கனடா
தொலைபேசி: +14164312515
செல்லிடப்பேசி: +14168457103