திருமதி சிதம்பரநாதன் மகேஸ்வரி
இறப்பு: 2012-02-14 பிறந்த இடம்: நீர்வேலி
நீர்வேலியைச் சேர்ந்த சிதம்பரநாதன் மகேஸ்வரி நேற்று (14.02.2012) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இராசம்மா தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான பொன்னையா இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகளும் சிதம்பரநாதனின் அன்பு மனைவியும் மீரா (நூலகர்,வலி. வடக்கு பிரதேச சபை, பொது நூலகம், அள வெட்டி), சகிரா, சஜீவன் (லண்டன் M.B.A University) ஆகியோரின் அன்புத் தாயும் இ. பார்த்தீபனின் அன்பு மாமியும் சாஜகான், சரண்யா, சாருஜன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் பாலசிங்கம் (கனடா), நடராஜா, சுப்பிர மணியம் (R.V.G), கந்தசாமி (ஞானலக்ஷ்மி லொறி உரிமையாளர்), கங்காதரன் ஆகி யோரின் அன்புச் சகோதரியும் சரஸ்வதி (கனடா), புஸ்பலீலா, சரஸ்வதி, கேதீஸ்வரி (றஞ்சி), கந்தசாமி (பிரான்ஸ்), குமாரசாமி (கொலண்ட்), பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (15.02.2012) புதன்கிழமை பி.பகல் ஒரு மணியளவில் அவரது இல் லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக நீர்வேலி தெற்கு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் :குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
குடும்பத்தினர். - நீர்வேலி தெற்கு பூதர்மட லேன், நீர்வேலி.