இறப்பு: 2012-01-20
பிறந்த இடம்: நீர்வேலி வாழ்ந்த இடம்: நீர்வேலி
நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் கோகிலராசன் நேற்று (20.01.2012) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் கனகம்மா தம்பதியரின் மூத்த புதல்வரும் கமலாதேவி (ஆஸ்திரேலியா),சௌந்தரராஜன் (விவசாய போதனாசிரியர், யாழ்ப்பாணம்), தேவராஜன், பத்மாவதி (ஜேர்மனி), நற்குணராசன் (ஹொலண்ட்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்ற குணரட்ணம், தயாறதி, சிவமலர், தவேஸ்வரன், சசிகலா ஆகியோரின் மைத்துனரும் சுஜீரா, கஜிதா, மேனன், பிரசாத், பிரசாந்தி, பிரதாப், பிரதீப், பிரகாஷ், அபித்தா, பிரவீன் ஆகியோரின் பெரியப்பாவும் நவசீலன், இன்பசீலன், சுசீலன், டயானி, கபிலன், சுமன் ஆகியோரின் பாசமிகு மாமனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (22.01.2012) ஞாயிற்றுக்கிழமை மு.ப. 10 மணி அளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக நீர்வேலி சிவியாக்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :சகோதரர்கள் இ.சௌந்தரராஜன், இ.தேவராஜன் (விவசாயப் போதனாசிரியர்)
தொடர்புகளுக்கு:
சகோதரர்கள் இ.சௌந்தரராஜன், இ.தேவராஜன் (விவசாயப் போதனாசிரியர்) - நீர்வேலி வடக்கு, நீர்வேலி. ,