இறப்பு: 2012-01-15
பிறந்த இடம்: நீர்வேலி வாழ்ந்த இடம்: நீர்வேலி
நீர்வேலி வடக்கு , நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இளையப்பு முத்துவேலு நேற்று (15.01.2012) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இளையப்பு- காராசிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், மட்டுவில் சிவன் கோவிலடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி - அன்னம்மா தம்பதியரின் மருமகனும் பரமேஸ்வரியின் அன்பு கணவரும் வரதராஜான், சிவசக்தி, குகதாஸ் (சுவிஸ்), மதிமோகன், மதியழகன் (சுவிஸ்) , சத்தியசீலன் ஆகியோரின் பாசமிகு தகப்பனும் ஜேந்தினி , பநீகானந்தன், பகீரதி (சுவிஸ்) , நிறோஜினி, இதயராஜினி (சுவிஸ்), ஆகியோரின் மாமானும் கிருத்திகன், திவாரகன், கிருசிகா, யதுர்சனன், நிதுர்சன், மதுரா, கபிதா, பவ்சிகன், அபிலாசன், அர்சயன், அபிஸ் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (16.01.2012) திங்கட்கிழமை மு.ப.11 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனத்துக்காக நீர்வேலி சிவியாக்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.