யாழ். நீர்வேலி தெற்கு பூதர்மட ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், நல்லூர் 44/14 A சங்கிலியன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் திருச்செல்வம் அவர்கள் 23-09-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
மதீஸ்சன், காயிஸ்திரி, கேதீஸ்வரி, விஜெய், மதிவர்ணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வட்சலகுமாரி, அனித்தா, துவராகா, ரேணுகாதேவி, செந்தூரன், சுதாகரன், சிவதர்ஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கபிலாஷினி, பிரதிஸ்ஷா, அமிலியா, மிலேஸ், சாத்விகா, திபிஷிகா, அகல்யா, மயிலாராணி ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரப்பிள்ளை, சபாரத்தினம், இராஜராஜஜேஸ்வரி, முருகேசு, இராஜரத்தினம் மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இலட்சுமி, தனலட்சுமி மற்றும் கமலநாயகி, செல்வரட்ணம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் நீர்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:
இல. 44/14 A,
சங்கிலியன் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்