Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திரு ஆறுமுகம் இராசநாயகம்



ஆறுமுகம் இராசநாயகம்
(ஓய்வு பெற்ற இலங்கை வங்கி முகாமையாளர்)


            நீர்வேலி தெற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் இராசநாயகம் அவர்கள் 08-11-2020 காலை இறைபதம் அடைந்தார்.

            அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், நாகம்மா தம்பதிகளின் மூத்த புதல்வனும் காலஞ்சென்றவர்களான சிவராஜா, மூத்தம்மா தம்பதிகளின்
மருமகனும் யோகலட்சுமி (சுசீலா) அவர்களின் அன்புக் கணவரும் தாயாபரன், தாயானந்தி, பராபரன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் திவாகரன், சர்மிளா, விஜயலதா ஆகியோரின் மாமனாரும் தனஞ்செயன், இந்துஜா, நித்தியா, கார்த்திகா, லக்ஷியா, சாகித்தியா, கார்த்தீபன் ஆகியோரின் பேரனாரும் காலஞ்சென்ற செல்வராணி மற்றும் சபாநாயகம், குலேந்திரநாயகம் ஆகியோரின் அன்புச்சகோதரனும் காலஞ்சென்றவர்களான நமச்சிவாயகம், கோடீஸ்வரி மற்றும் உருத்திரராணி, சற்குணலிங்கம்இ இந்திராதெவி, சந்திராதேவி, சித்திராதேவி, ஜெயக்குமார், சாந்தகுமார், அஞ்சலிதெவி, நிறஞ்சலிதேவி, சிவகுமார் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

             அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (09-11-2020) திங்கட்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பமாகி பூதவுடல் தகனக்கிரியைக்காக சீயக்காடு இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

    இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

கரந்தன்வீதி,                                                                                         
தகவல்
நீர்வேலி தெற்கு,                                                                                    குடும்பத்தினர்.
நீர்வேலி.                                                                                                  +94773847200




Posted on 09 Nov 2020 by Admin
Content Management Powered by CuteNews