Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திருமதி கு.மங்கையற்கரசி




பிறந்த இடம்: யாழ். நீர்வேலி தெற்கு
வாழ்ந்த இடம்: முள்ளியவளை/Canada



திருமதி மங்கையற்கரசி குமாரசிங்கம்

(ஓய்வு பெற்ற ஆசிரியை)


நீர்வேலி வடக்கை பிறப்பிடமாகவும், 4ம் வட்டாரம் முள்ளியவளையை நிரந்தர வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி மங்கையற்கரசி குமாரசிங்கம் (ஓய்வு பெற்ற ஆசிரியை) 09.08.2018 வியாழக்கிழமை இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான அரியகுட்டி-சின்னத்தங்கச்சி தம்பதிகளின் ஏக புத்திரியும் காலஞ்சென்றவர்களான செல்லையா-சிதம்பரம் தம்பதிகளின் மருமகளும் காலஞ்சென்ற குமாரசிங்கம்(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்புச்சகோதரியும், காலஞ்சென்ற தம்பையா மற்றும் வேலுப்பிள்ளை, கனகசிங்கம், பொன்னம்மா ஆகியோரின் மைத்துனியும், உதயராணி (ஓய்வு பெற்ற வலயக்கல்விப் பணிப்பாளர், முல்லை வலயம்), அமரர்.ஜெயரஞ்சினி, உதயகுமார்(கனடா), முல்லைக்குமார் (பிரதி அதிபர்,வவுனியா தமிழ் மகா வித்தியாலயம்), தேவகுமார், தேவகி(கனடா), தேவராணி (கனடா), விஜயகுமார் (கனடா), விஜயராணி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், முனீஸ்வரன் (இலங்கை), பரமேஸ்வரன் (ஓய்வு பெற்ற முகாமையாளர், ப.நோ.கூ.சங்கம்), றஜனி(கனடா), தனலட்சுமி (ஆசிரியர் பூந்தோட்டம் மகாவித்தியாலயம்), கெங்கா, ராஜவரன்(கனடா), சிவபாஸ்கரன் (கனடா), தனப்பிரியா (கனடா), தேவதாஸ் (கனடா) ஆகியோரின் மாமியாரும் ஜெயப்பிரணவன், ரிஷபாலன், யரூரன், யவனராம், சோபனா, காலஞ்சென்ற ஜனோஜா,மற்றும், செந்தூரன், தினேஸ்கரன், கதீஸ்கரன், சகானா, ஜனன்,அஜன் அபிநுஷன், தேனுஜா, அனுஷன், சாருஷன், துளிர்,தூயவன், அஸ்வினா,ஆதர்ஷ திவ்வியன், நிவேதா, கஜனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆரபி, ஆரளன், ஆரகன், அஜனியா, சரண்யா, பவித்திரன், குமரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12.08.2018 ஞாயிற்றுக்கிழமை 4ம் வட்டாரம், முள்ளியவளையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில்பிற்பகல் 02 மணியளவில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

தகவல் குடும்பத்தினர்.

4ம் வட்டாரம்,

முள்ளியவளை.

(இலங்கை)
தொடர்புகளுக்கு 905 813 0161(கனடா)



Posted on 10 Aug 2018 by Admin
Content Management Powered by CuteNews