திரு ஆறுமுகம் கந்தையா
(சிவத் தொண்டர்)
பிறப்பு : 31 சனவரி 1949 - இறப்பு : 24 யூன் 2018
பிறந்த இடம்: யாழ். சிறுப்பிட்டி தெற்கு
வாழ்ந்த இடம்: யாழ். சிறுப்பிட்டி தெற்கு
யாழ். சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கந்தையா அவர்கள் 24-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான காத்திஜேசு ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற விநாயகமூர்த்தி அவர்களின் அன்புச் சகோதரரும்,
தர்மலிங்கம், சோதிப்பிள்ளை, பார்வதி, சத்தியபாமா, கெங்காதேவி, பவானி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
முத்துசாமி, கனகசிங்கம், காலஞ்சென்றவர்களான சரஸ்வதி தெய்வேந்திரம் ஆகியோரின் அன்பு சகலனும்,
சிவா, காந்தன், சிவம், சக்தி, மணோஜா, சத்தியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சிவகாமி, சேந்தன், காத்திகேஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காயத்திரி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர் மற்றும் உற்றார், உறவினர்