திரு வேலுப்பிள்ளை சரவணமுத்து
(முன்னாள் இ.போ.ச நடத்துனர்- பருத்தித்துறை, கோண்டாவில்)
மலர்வு : 1 செப்ரெம்பர் 1941 - உதிர்வு : 19 டிசெம்பர் 2017
பிறந்த இடம்: யாழ். அல்வாய் வடக்கு
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி வடக்கு
யாழ். அல்வாய் வடக்கு சோனாவத்தையைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கைப் வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சரவணமுத்து அவர்கள் 19-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பிள்ளையம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
நவரூபன்(பிரான்ஸ்), பத்மசீலன்(சுவிஸ்), கீர்த்திகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கனகபூரணம், தங்கராசா(கொழும்பு), பரமேஸ்வரி(அல்வாய்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
றாகினி(பிரான்ஸ்), தாரணி(சுவிஸ்), கஜன்(ஆசிரியர்- யாழ். மானிப்பாய் இந்துக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற மயில்வாகனம்(இளைப்பாறிய ஆசிரியர்), பரமேஸ்வரி(இளைப்பாறிய ஆசிரியை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பவனுஷன்(பிரான்ஸ்), கிஷானி(பிரான்ஸ்), டயானி(பிரான்ஸ்), ஹரிஷ்(சுவிஸ்), சுகானா(சுவிஸ்), மேனிஷா(இலங்கை), ரிஷிகேஸ்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-12-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வை வடக்கு சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நவரூபன் - பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33953628146
பத்மசீலன் - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41433110261