இறப்பு: 2014-03-03
பிறந்த இடம்: நீர்வேலி ***** வாழ்ந்த இடம்: நீர்வேலி
நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஞானரத்தினம் (பசுபதி) செல்வரட்ணம் நேற்று 03.03.2014 காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சின்னக்குட்டி தம்பதியரின் அருமை மகளும், காலஞ்சென்ற செல்வரட்ணத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற ஜெயம் மற்றும் சிறில் வாசிங்ரன் (சின்ராசா), ஞானசோதி (அப்பன்) அன்ரன் (குஞ்சன்இத்தாலி), சாந்தா(இந்தியா), மேரிஸ்ரெலா (தங்கம்), மகேந்திரன் (இகூஆ), மேரிவிமலா(பவுண் இத்தாலி), அல்மேடா (இந்தியா) ஆகியோரின் அன்புத்தாயாரும், ஜெயலட்சுமி, ஞானரத்தினம், மேரி நிர்மலா, சகாயராணி, மகேந்திரன் (இந்தியா), பேனாட், கவியரசி, இராசநாயகம் (இத்தாலி), பத்திமா (இந்தியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று (04.03.2014) செவ்வாய்க்கிழமை மு.ப.10.00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, புனித மிக்கேல் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, பின்னர் மிக்கேல் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். - கரந்தன், நீர்வேலி மேற்கு.