இறப்பு: 2013-07-12
பிறந்த இடம்: நீர்வேலி ******** வாழ்ந்த இடம்: நீர்வேலி
நீர்வேலி மத்தியைச் சேர்ந்த திருமதி இராசம்மா தம்பிராசா 12.07.2013 வெள்ளிக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும் கந்தசாமி (இளைப்பாறிய ஆசிரியர் கொழும்பு), சரஸ்வதி (நீர்வேலி மத்தி) ஆகியோரின் அன்புத் தாயும், சின்னத்துரை (ஓய்வுபெற்ற இலிகிதர்), கமலா தேவி (கொழும்பு) ஆகியோரின் மாமியும் பகீரதி (ஆசிரியர் அத்தியார் இந்துக் கல்லூரி), பகீரதன் (ஜேர்மனி), திலீபன் (பொறியியலாளர்கனடா), தீபிகா (கணக்காளர்கொழும்பு), பிரதீபன் (கனடா), பிரதிகா (கொழும்பு), கஜாநத் (கொழும்புமாணவன்), கங்காதரன் (ஆசிரியர் யா/பத்தைமேனி இரத்தினேஸ்வரி வித்தியாலயம்), பொற்கலா (ஜேர்மனி), ரங்கன் (பொறியியலாளர்கொழும்பு), கங்காயினி (வைத்தியர்கனடா) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் சங்கீர்த்தனா (பொஸ்கோ வித்தியாலயம்), பானுஜன் (கிட்ஸ் பார்க் உரும்பிராய்), தக்ஷிகா (ஜேர்மனி), லபிஷன் (ஜேர்மனி), சுஜானி (கொழும்பு), சுபான் (கனடா) ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் இன்று (14.07.2013) ஞாயிற்றுக் கிழமை மு.ப. 11 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவு டல் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : மகன் த.கந்தசாமி
தொடர்புகளுக்கு
மகன் த.கந்தசாமி - நீர்வேலி மத்தி.