(முன்னாள் ஆங்கில ஆசிரியா், Times & வீரகேசரி படப்பிடிப்பாளர், Ellite Studio உரிமையாளர், புகைப்படக் கலையின் தந்தை)
மலர்வு : 8 யூன் 1929 - உதிர்வு : 2 மே 2012
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், யாழ் திருநெல்வேலியை வதிவிடமாகவும், வவுனியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த C.N.கந்தசாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
காலத்தால் அழியாத காவியம் ஒன்று
கரைந்து போனது...
சரித்திரத்தின் அத்தியாயம் ஒன்று
சரிந்து போனது...
புகைப்படத் துறையில் புதுமைகள் செய்த புன்னகை
அசையாமல் போனது...
செல்வத்தின் சீவியம் சிரஞ்சீவி ஆனது...
இங்கு சுற்றமும் சூழலும் கைகூப்பி நின்ற
கோபுரம் சரிந்து சரித்திரமானது...
அனைவரின் இதயங்களில்
பிள்ளைகள் புலம்பல்...
இனிது இனிது மக்கட் செல்வம் இனியது என
எங்கள் ஐயம்மா பெற்று எடுத்த பரம் பொருளே
அரிது அரிது ஆண் மகவு அரிது என
எங்கள் தாத்தா போற்றிய பேரறிவே!!
அன்பு அன்பு அண்ணனின் பாசம் என
எங்கள் அத்தைகொண்டாடிய பேரன்பே
மானிடப்பிறவியின் பெரும் பயன் கண்ட
எங்கள் தாய் கொண்ட பாக்கியமே!!
உறவுகள் தான் உலகம் என
எங்கள் தாய் மாமன் கொண்டாடியஉறவே
பாசத்தின் பிறப்பிடமாய் கல்வியின் புகழ் இடமாய்
பதினோரு பிள்ளைகளாம் நாங்கள் பாசமாய் பண்பாய்
வாழ வழிகாட்டிய தந்தையே நாம் கொண்ட பாசமலரே...
துவண்டபொழுதெல்லாம் தைரியம் சொல்லி வாழ
வழிகாட்டிய அஞ்சா நெஞ்சமே!
நீங்கள் காட்டிய பண்போடும் தைரியத்தோடும்
உங்கள் பெயர் சொல்லி
இறுமாந்து வாழ்வோம் பிள்ளைகள்,
மனைவி, அம்மாச்சி
கண்ணும் கருத்துமாய் எம் குடும்பம் காத்தீரே
மண்ணுலக வாழ்க்கை வெறுத்ததுவோ ஐயா..
என்னைப் பிரிந்து விண்ணுலகம் செல்ல முடிந்ததோ?
உறக்கம் இன்றி உங்கள் முகம் காணத் தவிக்கின்றேன்..
காதினிலே ரீங்காரம் இடும் அம்மாச்சி என்ற குரல்
உயிர் எடுத்து செல்கின்றதே..
இ னிஎப்பிறப்பில் உங்களைக் காண்பேன்?
பேரன் பேத்திகள்
அப்பப்பா இல்லாமல் துவண்டமனதோடு
கலங்கிநிற்கின்றார்கள்..
பூட்டப்பிள்ளைகள்
தாத்தா தாத்தா என வீடெங்கும் தேடும்
மழலை செல்வங்கள் வெளிநாடுகளில்
இணையம் மூலமாக தாத்தாவை தேடும் உங்கள்
அன்புச் செல்வங்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
ஜனதா - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41339713923
சசிதரன் - இலங்கை
செல்லிடப்பேசி: +94777173086
சுகிதா - பிரித்தானியா
தொலைபேசி: +442085145853
வனஜா - பிரான்ஸ்
தொலைபேசி: +33148952732