Obituaries - மரண அறிவித்தல்



நன்றி நவிலல்: திருமதி மகேஸ்வரி இளையதம்பி

திருமதி மகேஸ்வரி இளையதம்பி

நீர்வேலியைச் சேர்ந்த அமரர் திருமதி மகேஸ்வரி இளையதம்பி அவர்களது
மறைவு குறித்த நன்றி நவிலல்.



நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும் கனடா மார்க்கம் நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி மகேஸ்வரி இளையதம்பி ஆகிய எமது தாயாரின் மறைவுச் செய்தி கேட்டு ஆறாத்துயரில் இருந்தவேளையில் எமது இல்லத்திற்கு வருகை தந்தும் வெளிநாடுகளிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் ஆறுதல் கூறியவர்களுக்கும், பார்வையாளர் மண்டபத்திற்கு வருகை தந்தும், மலர்வளையங்கள் மற்றும் கண்ணீர் அஞ்சலி, மலர் அஞ்சலி ஆகியவற்றின் மூலம் தமது அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும் இறுதி நிகழ்விற் கலந்து கொண்டு பலவழிகளிலும் உதவிகளைச் செய்து எமக்கு உறுதுணையாக நின்ற உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல்: மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

Posted on 07 Mar 2013 by Admin
Content Management Powered by CuteNews