இறப்பு: 2013-01-16
பிறந்த இடம்: நீர்வேலி ****** வாழ்ந்த இடம்:நீர்வேலி
நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பாக்கியம் நேற்று (16.01.2013) புதன்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியத்தின் பாசமிகு மனைவியும், நாகம்மா, திருஞானசம்பந்தர், சிவசுந்தரம், சந்திரசேகரம் ஆகியோரின் பாசமிகு தாயும், காசிநாதன், செல்வராணி, ஜெகதீஸ்வரி, தவமலர் ஆகியோரின் மாமியும், பிரதீபன், மகிழினி, குமுதினி, துஷ்யந்தன், துஷ்யந்தினி, துளசி, நிஷாந்தி, அருள்ப்பிரியா, வினோப் பிரியா, விதுரன் ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (17.01.2013) வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக நீர்வேலி இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : சு.சந்திரசேகரம் (மகன்)
தொடர்புகளுக்கு
சு.சந்திரசேகரம் (மகன்) - நீர்வேலி மேற்கு, நீர்வேலி.